கோவை : மக்களை பற்றி சிந்திக்கக் கூடிய அரசுதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும் என சூலூரில் நடந்த பிரச்சாரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
கோவை : மக்களை பற்றி சிந்திக்கக் கூடிய அரசுதான் ஆட்சி செய்ய வேண்டும் என்பதால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும் என சூலூரில் நடந்த பிரச்சாரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
கோவை சூலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று மாலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :- இந்த தேர்தல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சொல்கின்றார். ஆனால், இந்த ஆட்சி நிச்சயம் தொடரும். கடந்த 2 ஆண்டு காலமாக தொலைநோக்கு சிந்தனையுடன் இந்த ஆட்சி செயல்பட்டு வருகின்றது. நீண்டகால கோரிக்கையான அவினாசி - அத்திகடவு திட்டத்தை செயல்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி. பெண்களுக்காக பல திட்டங்களை இந்த அரசு கொண்டு வந்துள்ளது. மக்களை பற்றி சிந்திக்கக் கூடிய அரசுதான் ஆட்சி செய்ய வேண்டும். அதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்க வேண்டும். ஸ்டாலின் கனவிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். பிரியாணி கடையில் வன்முறை செய்யும் கட்சியாக தி.மு.க. இருக்கின்றது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையில் காற்றை கூட ஊழல் செய்து 1.76 லட்சம் கோடியினை அவர்கள் சம்பாதித்துள்ளார்கள். மேலும், சட்டம் ஒழுங்கு இந்த மாநிலத்தில் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கின்றது. இந்த அரசு தொடர அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும், என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.