கோவை : பொள்ளாச்சி விவகாரத்தில் தவறிழைத்தவர்களை காப்பாற்றுகின்ற அரசாக அ.தி.மு.க. அரசு இருப்பதாகவும், இதனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமூகவிரோதி என்று சொன்னாலும் தவறில்லை என சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரதிநகர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வங்கியில் 15 லட்சம் போடுவதாக சொன்னது, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் என்றது, 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என சொன்னது என்று எதையும் நிறைவேற்றவில்லை. பிரதமர் என்ற முறையில் 5 ஆண்டு கால சாதனைகளை எடுத்து சொல்லாமல், வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், வேறு பிரச்சினைகளை கூறி மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற பிரதமர் முயல்கின்றார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி குடும்பம் குறித்து தரம் தாழ்ந்து, தரக்குறைவான வார்த்தைகளை பிரதமர் பயன்படுத்துகின்றார். தமிழகத்தின் உரிமைகளை மோடி ஆட்சி பறித்துள்ளது. நீட் தேர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றால் நீட் தேர்வில் விலக்கு பெறுவோம் என அக்கட்சியினர் தேர்தல் அறிக்கையில் சொல்கின்றனர். ஆனால், நீட் தேர்வை கட்டாயம் நடத்துவோம் என்று மத்திய அமைச்சர்கள் சொல்கின்றனர். இதேபோல, 8 வழிச்சாலைக்கு எதிரான போராட்டத்தை அரசு மதிக்கவில்லை. போராடிய மக்கள் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. 8 வழிச்சாலைக்கு தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் அன்புமணி ராமதாஸ் என்னால்தான் தடை கிடைத்தது என்றார். ஆனால், அதே சேலத்தில் சேலம் - சென்னை 8 வழிச்சாலை கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சொன்ன போது ராமதாஸ் அமைதியாக இருந்தார்.
மேலும், தமிழகம், புதுவை உட்பட பல இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகளை துவங்கி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலத்தில் எக்காரணம் கொண்டும் இந்த திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி சொல்கின்றார். ஆனால், தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து எதுவும் பேசவில்லை, அமைதியாகவே இருக்கின்றனர். இந்த திட்டத்தால் தஞ்சை பகுதி பாலைவனமாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்க்க வேண்டிய எடப்பாடி அரசு மௌனமாக இருக்கின்றது. தமிழகத்தில் 85 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றனர். இதை எதிர்க்காமல் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றது.
85 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கும் போது, அவர்களுக்கு இந்த அரசு உதவவில்லை.பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் இளம்பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை யார் செய்து இருந்தாலும் அவர்கள் சமூகவிரோதிகளே. ஆனால், தவறிழைத்தவர்களை காப்பாற்றுகின்ற அரசாக இந்த அரசு இருக்கின்றது. இவர்களை காப்பாற்ற முயலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சமூகவிரோதி என்று சொன்னாலும் தவறில்லை. தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை பார்த்தோம் என்பதற்காக எங்கள் மீது காவல்துறை வழக்கு போடுகின்றது. சமூக ஆர்வலர் முகிலன் என்ன ஆனார் என்று தெரியவில்லை. உயிரோடு இருக்கின்றாரா..?, இல்லையா..? என்று கூட தெரியவில்லை. முகிலன் எங்கே என்ற கேள்விக்கு தமிழக முதலமைச்சரின் பதில் என்ன..?.
வளர்மதி என்ற மாணவி துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார் என்பதற்காக கைது செய்யப்பட்டார். அரசின் தவறான நடவடிக்கைகளை விமர்சிக்கக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு செய்கின்றது. தமிழ்நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், கல்வி பிரச்சினைகளை பற்றி சிந்திக்கின்ற ஆட்சியாக இந்த மத்திய, மாநில அரசுகள் இல்லை. மோடியையும், பாடியைம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும், என பிரச்சாரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.