சின்னம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டு சுத்துவீங்க, உங்களை விட்டுருவமா..?. : சூலூரில் டிடிவி தினகரன் சூலுரை!

சின்னம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டு சுத்துவீங்க, உங்களை விட்டுருவமா..?. : சூலூரில் டிடிவி தினகரன் சூலுரை!


கோவை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு புரட்சி பெருந்தகை என்று பட்டம் கொடுத்துள்ளதற்கு பதிலாக புரட்சி பெருந்தொகை என்று பட்டம் கொடுத்தால் சரியாக இருக்கும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோவை சூலூர் தொகுதியில் பிரச்சாரத்தின் போது விமர்சித்துள்ளார்.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் சூலூர் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் சுகுமாருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது,

எடப்பாடி பழனிசாமிக்கு மதுரையில் புரட்சி பெருந்தகை என்று பட்டம் கொடுத்து இருக்கின்றனர் பார்த்தீர்களா..? என கேட்ட அவர், அவருக்கு புரட்சி பெருந்தொகை என்று பட்டம் கொடுத்தால் சரியாக இருந்திருக்கும் என தெரிவித்தார். மதுரையில் ராஜன்செல்லப்பாவின் மகன் ஐஸ் வைப்பதற்காக இந்த பட்டத்தை கொடுத்து இருக்கின்றார் என கூறிய அவர், மோடியிடம் மண்டியிட்டு தோப்புகரணம் போடுபவர்களுக்கு எல்லாம் புரட்சி பட்டம் கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.

தொடர்ந்து, அவர் பேசியதாவது :- ஜெயிலுக்கு போகும் போது சகோதரனாக நினைத்து சசிகலா, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கினார். துரோகத்தில் வேண்டுமானால் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி பட்டம் கொடுக்கலாம். வீரபாண்டிய கட்ட பொம்மன், கப்பலோட்டி தமிழன் என்றால் சிவாஜி நினைவிற்கு வருவார். மதுரை வீரன் என்றால் எம்.ஜி.ஆர் நினைவிற்கு வருவார். அதேபோல, எட்டப்பன்கள்  என்றால் எடப்பாடி பழனிசாமி நினைவிற்கு வருவார். சின்னம்மாவிற்கு துரோகம் செய்துவிட்டு சுத்துவீங்க, உங்களை விட்டுருவமா..?.

மேலும், திருப்பரங்குன்றத்தில் ஓ.பி.எஸ். பெண்களிடம் கெஞ்சுவதை பார்த்து இருப்பீர்கள். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் இரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா மாதிரி சுத்தப்போகின்றனரா..?, இல்லையா..? என பாருங்கள்..

கொங்கு மண்டல மக்கள் துரோகத்திற்கு எப்போதும் துணை நிற்கமாட்டார்கள். புரட்சி பெருந்தொகை 

எதில் லாபம் அதிகமா இருக்கின்றதோ அதைதான் செய்வார். சம்மந்தி, சகலை, ரகளை ஆகியோரின் வருமானத்தை பெருக்க புரட்சி பெருந்தொகை செயல்படுகின்றார். நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பே கிடையாது. இதை ராஜதந்திரம் என அவரது ஜால்ராக்கள் சொல்கின்றனர். வரும் 23-ம் தேதியோட ராஜதந்திரம் முடிய போகுது. எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த அநீதிக்கு நீங்கள்தான் நியாயம் சொல்லவேண்டும்.

அரசு ஊழியர் ஆசிரியர், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் துரோகத்தை ஒழிக்க 

அ.ம.மு.க.விற்கு வாக்களிக்க வேண்டும். சின்னியம்பாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யவும், பள்ளியில் கூடுதல் கட்டடிடம் அமைக்கவும், அவினாசி சாலையில் சுரங்க நடைபாதை அமைக்கவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு மின்கட்டண சலுகை, 60 வயது கடந்த நெசவாளர்ரகளுக்கு ஒய்வூதியம் போன்றவை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். புரட்சி 

பெருந்தொகையின் ஆட்சியை காலி செய்து புரட்சி தலைவரின் ஆட்சி அமைக்கப்படும். பதவிக்காக துரோகம் செய்வதை இனி யாரும்  நினைத்து கூட பார்க்கக் கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...