கோவையில் மறைந்த எம்.பி. ராமநாதனின் இல்லத்திற்கு நேரில் சென்று துரைமுருகன் மற்றும் வைகோ இரங்கல்

கோவை : மறைந்த தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. இராமநாதன் இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவ படத்திற்கு அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் வைகோ ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

கோவை : மறைந்த தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. இராமநாதன் இல்லத்திற்கு சென்று, அவரது திருவுருவ படத்திற்கு அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மற்றும் வைகோ ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

கோவை தென்றல் என அனைவராலும் அழைக்கப்பட்ட தி.மு.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினருமான மு. இராமநாதன் நேற்று முன்தினம் காலமானார். இந்நிலையில் அவரது இல்லத்திற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் சென்று மு.இராமநாதனின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், “பேச்சாற்றல் படைத்த மு.இராமநாதனிடம் நெருங்கி பழகிய அனுபவங்களை மறக்க முடியாது. கழகத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர். தனது வாழ்நாள் முழுவதும் தி.மு.க.விற்காக உழைத்தவர். கழகத்திற்காக உழைத்த தலைவர்களில் முன்னணியில் இருப்பவர். இவரது மறைவு பேரிழப்பாகும்,” என்று கூறினார்.



இதேபோல், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மு. இராமநாதன் இல்லத்திற்கு சென்று, அவரின் திருவுருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதைத்தொடர்ந்து அவர் பேட்டியளித்ததாவது :- பேரறிஞர், அண்ணாவின் அன்பையும் பெற்ற கோவை இராமநாதன் என்ற தியாகசுடன் 6 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர். 60 ஆண்டுகாலம் பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர். பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்த அவர், தி.மு.க.வின் சொற்பொழிவாளர்களில் தனி இடத்தை பிடித்துள்ளார். தி.மு.க. வரலாற்றில் இராமநாதனின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை. கொங்கு மண்டலத்தை தி.மு.க.வை வளர்த்த தலைவர்களில் முக்கியமான தலைவர்களில் ஒருவரான இவரது மறைவு தி.மு.க.விற்கு பேரிழப்பாகும். அவரது இறுதி மூச்சு அடங்கும் வரை தி.மு.க.வே அவரது மூச்சாக இருந்தது. அவரது மறைவிற்கு ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை கண்ணீர் அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம், என்றார்.



அவருடன் தி.மு.க. புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், தி.மு.க. பகுதி கழக பொறுப்பாளர் மார்க்கெட் மனோகரன், இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், வழக்கறிஞர் கணேஷ்குமார், ஏர்ப்போர்ட் ராஜேந்திரன், மார்க்கெட் சோமு, எல்.பி.எப். தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...