பணியின் போது மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மாரடைப்பால் மரணம்

கோவை : மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை : மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன் (37). இன்று காலை ரோந்து பணியினை மேற்கொண்டு வந்த அவர், சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சக காவல்துறையினர் விளையாடி கொண்டிருக்கும் மைதானத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவர்களுடன் சற்று நேரம் விளையாடி விட்டு அங்கு அமர்ந்துபேசி கொண்டு இருந்த போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த காவலர்கள் அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இருப்பினும், அவர் மாரடைப்பால் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தற்போது உள்ளது.

மரணமடைந்த உதவி காவல் ஆய்வாளர் பாஸ்கரனின் சொந்த ஊர் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம். இவருக்கு ஞான செளந்தரி மனைவியும், கினிகிதா (10) என்ற மகளும் உள்ளனர். 2003 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர், மேட்டுப்பாளையத்தில் ஓராண்டாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...