சூலூர் இடைத்தேர்தல் : 12 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது மக்கள் நீதி மய்யம்

கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, 12 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதாவது,

கோவை : சூலூர் இடைத்தேர்தலை முன்னிட்டு, 12 அம்சங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதாவது,

  1. மக்களின் நலனுக்காக எம்.எல்.ஏ.வின் ஊதியம் பயன்படுத்தப்படும்.
  2. ஆனைமலையாறு -நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற மக்கள் நீதி மய்யம் நடவடிக்கை எடுக்கும்.
  3. நெசவு மற்றும் நூற்பாலைகள் இருப்பதால் தீயணைப்பு நிலையம் சுல்தான் பேட்டை அல்லது செஞ்சேரி மலையில் அமைக்கப்படும்.
  4. இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதுடன், ஆரோக்கியமான உணவுப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும்.
  5. அத்திக்கடவு அணையில் இருந்து சுத்தமான தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  6. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க மக்கள் நீதி மய்யம் நடவடிக்கை எடுக்கும்.
  7. நொய்யல் ஆற்றின் கூடுதல் நீர் போகம்பட்டி, பொன்னாங்கண்ணி மற்றும் வரப்பட்டி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு திருப்பி விடப்படும். 
  8. கால்நடைகளுக்கான தீவனங்களின் விலை குறைத்து வழங்கப்பட்டு, விவசாயிகள் இலாபம் ஈட்டுவதுடன், பால் விலை குறைக்கப்படும்.
  9. அனைத்து வீடுகளுக்கும் சோலார் பொருத்தப்பட்டு, இரவு நேரங்களிலும் நெசவு தொழில் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நெசவு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.
  10. கைத்தறி மற்றும் விசத்தறிகளுக்கு இடையிலான இடைத்தரகர்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  11. சூலூர் அல்லது சுல்தான்பேட்டையில் அரசு கலை கல்லூரி மற்றும் ஐ.டி.ஐ. அமைக்க மக்கள் நீதி மய்யம் நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும்.
  12. மக்கள் பயன்படும் வகையில் சூலூர், இருகூர் மற்றும் சோமனூர் ரயில்நிறுத்தங்கள் தரம் உயர்த்தப்படும்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...