நீலகிரி : நீலகிரியில் பெய்து வரும் மழை, வார இறுதி நாட்களிலும் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
நீலகிரி : நீலகிரியில் பெய்து வரும் மழை, வார இறுதி நாட்களிலும் நீடிப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் குன்னூரில் கடந்த சில நாட்களாக மதிய வேளைகளில் பரவலாக மழைப் பெய்து வந்தது. இதனை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக ரசித்தனர். இந்நிலையில், உதகை, குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் இந்த மழையால் மழை நீர் சாலைகளில் கரை புரண்டு ஒடுகிறது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பலர் தங்கும் விடுதிகளிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து காணப்படும் நிலையில், குறிப்பிட்ட சுற்றுலாத் தலத்தை குறித்த நேரத்தில் காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த குளு குளு காலநிலையினை சுற்றுலாப் பயணிகள் வெகுவாக அனுபவித்தனர்.