கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் அடிக்கடி பழுதாகும் மின் மோட்டார் : தண்ணீர் இருந்தும் விநியோகம் செய்ய முடியாத நிலை

நீலகிரி : கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் அடிக்கடி மின் மோட்டார் பழுதடைவதால், தண்ணீர் இருந்தும் விநியோகிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், குடிதண்ணீர் இன்றி பொதுமக்கள் தனியாரிடம் விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி : கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் அடிக்கடி மின் மோட்டார் பழுதடைவதால், தண்ணீர் இருந்தும் விநியோகிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், குடிதண்ணீர் இன்றி பொதுமக்கள் தனியாரிடம் விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் பிரச்சினையைப் போக்குவதற்கு மின் மோட்டார் வாங்கப்பட்டது. ஆனால், இது அடிக்கடி பழுதாகி நிற்பதால், இப்பகுதியில் உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாமல் பொதுமக்கள் தனியாரிடம் விலைக்கு வாங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. துணி துவைக்கக் குந்தா பாலம் கட்டலாட அருவிக்கு பொதுமக்கள் அதிக அளவில் செல்லவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பாதுகாப்பில்லாத சூழலில், பெண்களும், குழந்தைகளும் குடத்துடன் தண்ணீருக்காக வனப்பகுதியில் நீண்ட தூரம் செல்ல வேண்டிய சூழல் நிலவி வருகிறது.



இது குறித்து கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சி நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, "கோத்தகிரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிறுவனம் டெண்டர் எடுத்து மின் மோட்டார் சரி செய்து வருகிறது. சரிவர மின் மோட்டார் பழுது பார்ப்பதில்லை. இதனால், மாதம் 5 முதல் 6 முறை பழுதாகி நிற்பதால், எங்களால் தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது," என்கின்றனர். 

கோடை காலம் தொடங்கி விட்டதால், இனி வரும் காலங்களில் இப்பகுதியில் தண்ணீர் பிரச்சினை மேலும் தலைவிரித்தாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் அவசியத்தைக் கருதி பேரூராட்சி நிர்வாகம் புதிய மோட்டாரை பொருத்தி தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வினை தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...