குப்பை மற்றும் கழிவுகளால் பொலிவிழந்து காணப்படும் உதகை தேனிலவு படகு இல்லம் : சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நீலகிரி : உதகை தேனிலவு படகு இல்லம் பகுதியில் கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பொலிவிழந்து காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நீலகிரி : உதகை தேனிலவு படகு இல்லம் பகுதியில் கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பொலிவிழந்து காணப்படுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.



உதகைக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உதகை ஏரியின் மறு கரையில் புதிதாக தேனிலவு படகு இல்லம் அமைக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட படகு இல்லம் மற்றும் நடைபாதை சில ஆண்டுகளில் பொலிவில்லாமல் காணப்பட்டது. நடைபாதையையொட்டி, வனப்பகுதி இருப்பதால், காலை நேரத்தில் நடை பயிற்சி செல்லும் பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில், தேனிலவு படகு இல்லம் சீரமைப்பு பணிக்காக 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம், புதிய படகு இல்லத்தின் நடைபாதைகள், கூரைகள் மற்றும் படகு நிறுத்தும் தளம் ஆகியவை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை தரமில்லாமல் இருப்பதாலும், புதர்கள் மண்டி கிடப்பதாலும், சுற்றுலாப் பயணிகள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டிடக் கழிவுகள் மற்றும் வீணான உடைந்த படகின் பாகங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் தேனிலவு படகு இல்லம் பொலிவை இழந்துள்ளது. எனவே, தேனிலவு படகு இல்லத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...