மேட்டுப்பாளையத்தில் காட்டுயானை தாக்கி விவசாய கூலி தொழிலாளி படுகாயம்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கி விவசாய கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.


கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காட்டுயானை தாக்கி விவசாய கூலி தொழிலாளி படுகாயமடைந்தார்.

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள கல்லார் பகுதிகளில் கடந்த சில தினங்களாக காட்டுயானைகள் நடமாட்டம் அதிமாக உள்ளது. வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தண்ணீரினை தேடி யானை உள்ளிட்ட வன விலங்குகள் பவானி ஆறு மற்றும் கல்லார் நீரோடைகளை தேடி வரத்து வங்கியுள்ளன. இந்த நிலையில், இன்று அதிகாலை கல்லார் தூரிப்பாலம் அருகே விவசாய நிலத்தில் ஒற்றை காட்டுயானை நுழைந்துள்ளது. அப்போது, விவசாய பணிக்காக சென்ற கிருஷ்ணமூர்த்தி என்ற கூலி தொழிலாளியை அந்த காட்டுயானை துரத்தி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிடவே, காட்டு யானை அவரை விட்டு விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. 

பின்னர், தலைப்பகுதியில் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய கிருஷ்ணமூர்த்தியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, கோடை காலம் என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...