வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசாணைப்படி மீண்டும் வேலை வழங்கவும் : பிரிக்கால் நிர்வாகத்திற்கு ஏ.ஐ.சி.சி.டி.யூ வலியுறுத்தல்

கோவை : தமிழக அரசாணைப்படி, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பிரிக்கால் நிர்வாகம் வேலை வழங்க வேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.


கோவை : தமிழக அரசாணைப்படி, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு பிரிக்கால் நிர்வாகம் வேலை வழங்க வேண்டும் என அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கோவை பிரிக்கால் லிமிடெட்டில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடக்கோரி கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் 21-ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், தொழிலாளர்துறை ஆணைப்படி, வேலக்கு திரும்பிய தொழிலாளர்களில் 302 பேரை நிர்வாகம் உத்தரகாண்ட், மகாரஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பணியிட மாறுதல் செய்தது. மேலும், 20 சதவீத உச்சவரம்பற்ற போனஸ், 15.34 சதவீத லாபத்தில் பங்குத்தொகை, கல்வித்தொகை, தற்செயல் விடுப்புத் தொகைகள் எங்கள் சங்க தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. இந்தப் பிரச்சனைகளை நீதிமன்ற விசாரணைக்கு அனுப்பக்கோரி எமது சங்கம் தொழிற்தகராறு எழுப்பியது.

இந்நிலையில், நிர்வாகத்தின் பணியிட மாறுதல்களை தவறு என்று நிலை எடுத்த எமது சங்க உறுப்பினர்கள் 294 பேரை நிர்வாகம் கடந்த பிப்ரவரி 11-ம் தேதி வேலை நீக்கம் செய்தது. வேலைநீக்க உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டது. நிர்வாகத்தின் மேல்முறையீட்டினால், கடந்த 3-ம் தேதி அரசாணைகள் 221, 222 மூலம் 10(1),10பி பிரிவுகளின் கீழ் அரசாணைகள் போடப்பட்டுள்ளன. மேலும், சங்க உறுப்பினர்களின் பணியிட மாற்றும் உத்தரவை நிறுத்தி வைக்குமாறு நிர்வாகத்திற்கு அரசு ஆணையிட்டது.

நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப போடப்பட்ட அரசாணைப்படி, பிரிக்கால் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...