கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை மாற்றுவற்காக வாங்கப்பட்ட 58 ஆயிரம் எல்.இ.டி. தெரு விளக்குக்கள் பொருத்தும் பணி இந்த மாதத்தில் தொடங்குகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு இருந்த 60 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் 100 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இந்த வார்டுகளில் தெருவிளக்குகள் பராமரிக்கும் பணி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முறையான பராமரிப்பின்மை மற்றும் சரியாக செயல்படவில்லை என பொதுமக்கள் அடுத்தடுத்து புகார்களை தெரிவித்து வந்தனர். இதையடுத்து, புதிதாக சேர்க்கப்பட்ட 40 வார்டுகளில் ஒப்பந்ததாரர்களின் மூலம் தெருவிளக்குகள் மாற்றப்பட்டு விட்டன.
தற்போது, பழைய 60 வார்டுகளில் இருக்கும் தெரு விளக்குகளை மாற்றும் பணி தனியாரிடம் வழங்கியும் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், வரும் மே 24-ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட பழைய வார்டுகளில் தெரு விளக்குகளை மாற்றும் பணி தொடங்குகிறது. இத்ஜற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.74 கோடி மதிப்பில் 58,000 தெருவிளக்குகள் வாங்கப்பட்டுள்ளன. மேலும், 6 மாதங்களுக்குள் இந்தப் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு கோவை மாநகராட்சி கெடு விதித்துள்ளது.