இந்தியாவிலேயே ஸ்கோடா கார் நிறுவனத்தின் மிகப்பெரிய பணிமனை கோவையில் தொடக்கம்

கோவை : தென்னிந்தியாவில் சந்தையை விரிவுபடுத்தும் விதமாக, இந்தியாவிலேயே மிகப்பெரிய பணிமனையை கோவையில் தொடங்கியது ஸ்கோடா கார் நிறுவனம்.

கோவை : தென்னிந்தியாவில் சந்தையை விரிவுபடுத்தும் விதமாக, இந்தியாவிலேயே மிகப்பெரிய பணிமனையை கோவையில் தொடங்கியது ஸ்கோடா கார் நிறுவனம். 



இந்தியாவில் அனைத்து வகை பிரிவினரையும் கவரும் வகையில் ஸ்கோடா கார் நிறுவனம் பல்வேறு வகையான கார்களை அறிமுகம் செய்து இந்திய சந்தையில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தநிலையில், தென்னிந்தியாவில் தனது விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப மிகப்பெரிய உயர்தர கார் பணிமனையை கோவை சவுரிபாளையத்தில் துவக்கி உள்ளது. மொத்தம் 49,585 சதுர அணியைக் கொண்ட இந்த பணிமனையில் ஒரே நேரத்தில் 50 கார்களை நிறுத்த முடியும். மேலும், ஆண்டிற்கு 20,000 கார்களை சர்வீஸ் செய்ய முடியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மிகப்பெரிய பணிமனை துவக்க விழா எஸ்.ஜி.ஏ.வ்கார்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ஸ்கோடா நிறுவனத்தின் சேவை மற்றும் மார்க்கெட்டிங் இயக்குனர் ஜாக்ஹோலிஸ் கலந்து பணிமனையை திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “ஸ்கோடா இந்தியா தனது வர்த்தகத்தை தென்னிந்தியாவில் விரிவுபடுத்தும் விதமாக இந்த பணிமனை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளின் மூலம், எங்களது பிராண்டை மேம்படுத்த முடியும். மேலும், எஸ்.ஜி.ஏ. கார்ஸ் உடன் ஸ்கோடா இந்தியாவின் ஒன்றிணந்த செயல்பாட்டில் நம்பிக்கை உள்ளது,” என்றார்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...