உதகை ரோஜா பூங்காவில் சுற்றுலாப் பயணிகளை கவரும் 40 ஆயிரம் ரோஜா செடிகள்

நீலகிரி : உதகை ரோஜா பூங்காவில் உள்ள ஐந்து அடுக்கில் 4 ஆயிரத்து 200 வகைகளைச் சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் க ரசித்து வருகின்றனர்.

நீலகிரி : உதகை ரோஜா பூங்காவில் உள்ள ஐந்து அடுக்கில் 4 ஆயிரத்து 200 வகைகளைச் சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் க ரசித்து வருகின்றனர்.



கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1995–ம் ஆண்டு 100–வது மலர் கண்காட்சி பூங்காவில் நடந்தது. அப்போது, தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உதகை விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்காவை தொடங்கி வைத்தார். உதகை ரோஜா பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது. மலைச்சரிவான பகுதி மற்றும் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 வகைகளை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 



கோடை சீசனை முன்னிட்டு, அந்த செடிகளில் ரோஜா மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. உதகை ரோஜா பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நட்டு வைத்த ரோஜா செடி தற்போதும் உள்ளது. அந்த ரோஜா செடிக்கு ஜெயலலிதா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த ரோஜா செடிகளும் உள்ளன. 



உலக ரோஜா சம்மேளனம், விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதை கடந்த 2006–ம் ஆண்டு ரோஜா பூங்காவுக்கு வழங்கியது. மேலும், இந்தப் பூங்காவில் ஹெரிடேஜ் கார்டன் மற்றும் டேபிள் ரோஜாக்கள் பூத்துக் குலுங்குகிறது. அலங்கார செடிகள் அழகாக காட்சி தரும் வகையில் வெட்டி விடப்பட்டு இருக்கிறது. இது சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து உள்ளது. பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதோடு, அதனை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...