கோத்தகிரியில் பழங்குடியினரின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்ட டாக்டர் நரசிம்மனின் 102-வது பிறந்த நாள்

நீலகிரி : நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கத்தின் (நாவா) நிறுவனர் டாக்டர் நரசிம்மனின் 102-வது பிறந்த நாள் விழா, பழங்குடியினரின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டது.

நீலகிரி : நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கத்தின் (நாவா) நிறுவனர் டாக்டர் நரசிம்மனின் 102-வது பிறந்த நாள் விழா, பழங்குடியினரின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்பட்டது.

கோத்தகிரி 'நாவா' அலுவலக வளாகத்தில் நடந்த இவ்விழாவில், கோடை விழா கண்காட்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. அதில், பழங்குடியினரின் கைவினை பொருட்கள், வாழ்வியல் புகைப்பட கண்காட்சி, பாரம்பரிய மூலிகை மருந்துகள் மற்றும் 'சைல்ட் லைன்' விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்த அரங்குகள் இடம்பெற்றன. கண்காட்சியில் இடம்பெற்ற நீலகிரி பழங்குடியின மக்களின் மாதிரி குடில்கள் மற்றும் நடனம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. மூலிகை மருந்து குறித்த அரங்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது.



இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில், “பழங்குடியினர் கண்காட்சியில் பல்வேறு கைவினை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால், அதனை உள்ளூர் மக்களுடன், சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்தனர். மேலும், இங்குள்ள புகைப்படங்கள், மாணவ, மாணவியருக்கு பயனுள்ளதாக உள்ளன. பொதுமக்கள் பார்வைக்காக வரும் 27-ம் தேதி வரை கண்காட்சி நடத்தப்பட உள்ளது,”என்றனர். 



இந்த நிகழ்ச்சியில், நாவா செயலாளர் ஆல்வாஸ், பொருளாளர் சண்முகன், கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...