உதகை படகு இல்லத்தில் ஏ.டி.எம் மையம் அமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நீலகிரி : கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் உதகை படகு இல்லத்தில் ஏ.டி.எம் மையம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். எனவே, ஏ.டி.எம். அமைக்க சுற்றுலாத்துறையும், படகு இல்ல நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி : கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் உதகை படகு இல்லத்தில் ஏ.டி.எம் மையம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். எனவே, ஏ.டி.எம். அமைக்க சுற்றுலாத்துறையும், படகு இல்ல நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இந்தாண்டு மே 1ம் தேதி கோடை விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் 

துவக்கி வைத்தார். இந்தாண்டு கோடை சீசனுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவர, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் 17-ம் தேதி தொடங்கும் 123வது மலர் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறவுள்ளது. மேலும், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெறவுள்ளது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மற்ற நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு 3 லட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய அதிகம் ஆர்வம் காட்டுவதால், உதகை படகு இல்லத்திற்க்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து தங்களது குடும்பத்தாருடன் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது தேவைக்காக பணம் எடுக்க இப்பகுதில் ஏ.டி.எம் மையம் இல்லாததால், பணம் எடுக்க சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், மார்க்கெட் பகுதி, காந்தள் பகுதிக்கு ஆட்டோ மூலம் சென்று பணம் எடுத்து வரும் நிலை உள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி உதகை படகு இல்லத்தில் ஒரு ஏ.டி.எம் மையம் அமைக்க சுற்றுலாத்துறையும், படகு இல்ல நிர்வாகம் முன் வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...