மேட்டுப்பாளையத்தில் மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி தொழிலாளி உயிரிழப்பு

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயக் கூலி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வேடர்காலனி பகுதியில் பவானி ஆற்று நீர் பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தவர் சின்னதம்பி. இவர், இன்று மதியம் வாழை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக பவானி ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள பம்பு செட் பகுதிக்கு சென்று, மின் சுவிட்சை போட முயற்சித்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, மின்சாரம் பாய்ந்து சின்னதம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, அந்த வழியே வந்த அப்பகுதி மக்கள், உயிரற்ற நிலையில் மின்சார பெட்டி அருகே இருந்த சின்னதம்பியை பார்த்து மேட்டுப்பாளையம் காவல்துறைக்கும் மின்சார வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். 

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின்சார வாரிய ஊழியர்கள் உதவியுடன் சின்னதம்பியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...