குன்னூரில் அணையில் மீன்பிடிக்க சென்ற பொறியியல் மாணவன் உட்பட இருவர் நீரில் மூழ்கி பலி

நீலகிரி : குன்னூர் ரேலியா அணையில் மீன்பிடிக்க சென்ற பொறியியல் மாணவன் உட்பட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீலகிரி : குன்னூர் ரேலியா அணையில் மீன்பிடிக்க சென்ற பொறியியல் மாணவன் உட்பட இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கம்பிசோலை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் (17), ரகு (13), பிரதீப், பிரசாத், கெவின் ஆகிய ஐந்து பேரும் அருகே இருக்கும் ரேலியா அணையில் மீன் பிடிக்க நேற்று சென்றனர். அலெக்ஸ் மற்றும் ரகு ஆகியோர் சற்று ஆழமான பகுதிக்கு சென்று மீன் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது, அலெக்ஸ் கால் வழுக்கி உள்ளே சென்றார். இதனால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதவித்துக் கொண்டிருந்த அவர், கைகளை அசைத்து காப்பாற்ற சைகை செய்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரகு, தன் கண் முன்னே அலெக்ஸ் போராடுவதை பார்த்து கையை நீட்டி காப்பாற்ற முயற்சி செய்தார். இதில், ரகுவும் நீரில் மூழ்கினார். சிறிது நேரத்தில் இருவரும் இறந்தனர்.



நண்பர்கள் இருவரும் இறந்ததை பார்த்த பிரதீப், பிரசாத் ஆகியோர் பயத்தில் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அங்கு அழுதுக் கொண்டிருந்த கெவின் மட்டும் அங்கு வந்த பொதுமக்களிடம் கூறினான். தகவல் அறிந்து சென்ற குன்னூர் தீயணைப்பு துறை அதிகாரி மோகன், ராஜகோபால் மற்றும் ஊழியர்கள், ரேலியா அணையில் இறங்கி இருவரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இறந்த அலெக்ஸ் கேத்தி தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே, அணையின் நீரில் மூழ்கி 2 பேர் உயிரிழந்த அருவங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...