கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வழிதவறிய சிறுவனை மீட்க சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் 3 வயது மதிக்கத்தக்க சிறுவன் இன்று மேட்டுப்பாளையம் காவல்நிலையம் அருகே உள்ள அரோமா பேக்கரி முன்பு வழி தெரியாமல் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். இந்த சிறுவனை நமது மேட்டுப்பாளையம் சமூக ஆர்வலர் கணேசன் மீட்டு, மேட்டுப்பாளையம் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் அச்சிறுவனை விசாரித்த பொழுது, அவனால் அவனது பெற்றோர் மற்றும் ஊரின் விபரங்களை சொல்லத் தெரியவில்லை. தற்பொழுது, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் அச்சிறுவன் உள்ளான். சிறுவனை மீட்க சம்பந்தப்பட்டவர்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்புக்கு, மேட்டுப்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கரன் 9600926199.