கோவை : பந்தய சாலையில் உள்ள தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் நியமனத்தில் இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், சி.எஸ்.ஐ. திருச்சபையின் பொருளாளர் மற்றும் பிஷப்பின் உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை பந்தய சாலையில் தென்னிந்திய திருச்சபை தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு கடந்த மாதம் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பணி நியமனம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது திருச்சபையின் பிஷப் திமோத்தி ரவீந்தர் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, தலைமை ஆசிரியர் நியமனம் தொடர்பாக இரு தரப்பினரும் மாறி மாறி கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தாக்கிக் கொண்டனர். இதில், திருச்சபையின் செயலாளர் பதவி வகிக்கும் பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ் (43), தாக்கப்பட்டதையடுத்து ,அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பந்தய சாலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, கோவையைச் சேர்ந்த பிரின்ஸ் எர்னஸ்ட் (41), ஜான்கமலேஷ் (34) மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பாதிரியார் கவிராஜ் ஜார்ஜ் (46) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், மற்றொரு பிரிவைச் சேர்ந்த கல்விக்குழு கன்வீனர் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், பிஷப் திமோத்தி ரவீந்தர், பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ், பொருளாளர் டேவிட் மங்கள தாஸ் , பிஷப் உதவியாளர் பாக்கியநாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், போலீசார் இவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று தென்னிந்திய திருச்சபை அலுவலகம் அருகே வைத்து பொருளாளர் டேவிட் மங்கள தாஸை கைது செய்தனர். அதேபோல, ராமநாதபுரம் பகுதியில் வைத்து பிஷப்பின் உதவியாளர் பாக்கியநாதனையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் பிஷப் மற்றும் பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டிய குருமார்கள், கல்வி ஆசிரியர் நியமன விவகாரத்தில் மோதலில் ஈடுபடும் செய்திகள் பொதுமக்கள் மத்தியில் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.