கோவை : மேட்டுப்பாளையம் அருகே கோடைக்கால வறட்சியில் வன உயிரினங்களுக்கு ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளை போக்கும் வகையில், வனப்பகுதிக்குள் தாது சத்துக்கள் நிறைந்த உப்புக் கட்டிகளை வைக்கும் பணியை வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதியில் போதிய மழையின்றி கடும் வறட்சி வாட்டி வருவதால் காட்டினுள் இருந்த இயற்கையான நீர்நிலைகள் வற்றிப்போயுள்ளன. மேலும், செடி, கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்து சருகாகி வருகின்றன. மேட்டுப்பாளையம் வனச்சரக பகுதி சுமார் 23 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள இவ்வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான், செந்நாய் என ஏராளமான வன உயிரினங்கள் இருந்தாலும், இங்கு யானைகளின் எண்ணிக்கையே மிக அதிகம்.

இவ்வாண்டு பெய்ய வேண்டிய பருவமழை பொய்த்துப்போன காரணத்தினாலும், கோடை வெயிலின் தாக்கம் முன்கூட்டியே துவங்கியதாலும், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வன உயிரினங்களின் தாகம் தீர்க்க உதவும் வன குட்டைகள், நீரோடைகள் என அனைத்து நீராதாரங்களும் வறண்டு வருகின்றன. இதனால், பசுமை இழந்து காணப்படும் காட்டுக்குள் வன உயிரினங்களுக்கு போதிய உணவோ, நீரோ இன்றி அவை தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது போன்ற சூழலில் விலங்கினங்களின் இயல்பான நோய் எதிர்ப்பு திறன் குறைந்து போய் பலவீனமான நிலையில் எளிதில் பல்வேறு நோய் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு யானை உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் தாகம் தீர்க்கும் வகையில், வன எல்லைகளில் செயற்கை தொட்டிகளை கட்டி, அதில் நீர் நிரப்பும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த தண்ணீர் தொட்டிகளை தேடி யானைக் கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வகை விலங்கினங்களும் வந்தபடி உள்ளதால், இவற்றின் வறட்சி கால உடல் பாதிப்பை தடுக்கவும் வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதன்படி, மிருகங்களின் உடலுக்கு தேவையான அனைத்து தாது சத்துக்கள் அடங்கிய உப்புக்கட்டிகளை வைக்கும் பணியினை தற்போது வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, தண்ணீர் தொட்டிகளை தேடி விலங்கினங்கள் தினசரி கூட்டம், கூட்டமாக வருவதால், தொட்டிகளின் அருகிலேயே இந்த உப்புக் கட்டிகளை வைத்து வருகின்றனர். தண்ணீர் தொட்டிகளில் உள்ள நீரை அருந்த வரும் யானை, மான், காட்டெருமைகள் உள்ளிட்ட வன விலங்குகள் இந்த உப்புக்கட்டிகளையும் சுவைத்து உண்ணும் போது, அதன் உடலில் போதுமான சத்துக்கள் கிடைத்து நோய் எதிர்ப்பு திறனும் மேம்படும் என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.