உதகை நகராட்சியில் துப்பரவு பணியாளர் மீது குப்பைகளை கொட்டிய அ.தி.மு.க. பிரமுகரின் சகோதரர்

நீலகிரி : உதகை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் மீது அ.தி.மு.க. முன்னாள் நகர செயலாளரின் சகோதரர் குப்பையை கொட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி : உதகை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர் மீது அ.தி.மு.க. முன்னாள் நகர  செயலாளரின் சகோதரர் குப்பையை கொட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை நாள்தோறும் நகராட்சி ஊழியர்கள் சென்று சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில்,  உதகை பாம்பேகேஸ் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை குடியிருப்பு பகுதிகளில் குப்பை சேகரிக்கச் சென்ற துப்புரவு பணியாளர் மீது அ.தி.மு.க. முன்னாள் நகர  செயலாளர் ராஜா முகமதுவின் சகோதரர் நஷீர் குப்பைகளைக் கொட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், உதகை மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 



இதனையடுத்து, துப்புரவு பணியாளரிடம் மன்னிப்பு கேட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது.  தற்போது, கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில், அன்றாடம் குப்பைகள் குவிந்து வருவதால், குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியாளர்களின் இந்த திடீர் போராட்டம்  உதகை பகுதியில் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...