தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

கோவை : மதுக்கரை அருகே கோவில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : மதுக்கரை அருகே கோவில் திருவிழாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மதுக்கரை அருகே குமிட்டிபதி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று சித்திரை திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, தாழ்த்தப்பட்ட மக்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, ஜமாப் அடித்தபடியே தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் சென்றதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜமாப் அடிக்க கூடாது என கூறியதை ஏற்க மறுத்ததால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது மற்றொரு தரப்பினர், சாதிப்பெயரை சொல்லி இழிவுபடுத்திபடி தடி மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த 6 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 



இந்த நிலையில், தாழ்த்தப்பட்ட மக்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதுகாப்பு அளிக்கக் கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் உரிய நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து மனு அளிக்கப்பட்டது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...