கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்ற உள்ள 1,296 அரசு ஊழியர்களுக்கு வரும் 28-ம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை சூலூரில் வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சூலூர் சட்டமன்ற தொகுதியில் 324 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 8 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 1,296 அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கான முதல்கட்ட பயிற்சி வரும் 28-ம் தேதி சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "சூலூரில் வாக்குச்சாவடி மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களாக சுமார் 1,296 அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்கள் யாருமே சூலூர் தொகுதியை சார்ந்தவர்கள் இல்லை," என்றார்.