கோவையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இருவர் கொலை : குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு

கோவை : கடந்த 2016-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கோவை : கடந்த 2016-ம் ஆண்டு பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கோவை எஸ்.ஐ.எச்.எஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் ஆர்.ஜி.புதூர் பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் மேடை அலங்கார பணி செய்து வந்துள்ளார். இவரது நண்பர் கோபாலகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுனராக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை 2-ம் தேதி கார்த்திகேயன் மற்றும் கோபாலகிருஷ்ணன் இருவரும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில் அவருடன் பணியாற்றிய கருப்புசாமி என்பவருக்கு கார்த்திகேயன் ஒரு லட்சம் ரூபாய் பண பாக்கி வைத்திருந்ததாகவும், அதை கொடுக்காத காரணத்தால் கொலையில் ஈடுபட்டதாக தெரியவந்தது. 

இதனையடுத்து, கருப்பசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், கொலை குற்றம் சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 3 ஆயுள் சிறைத்தண்டனை விதித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குணசேகரன் உத்தரவிட்டார். இரண்டு கொலைகளுக்கு இரு ஆயுள் தண்டனையும், அத்துமீறி நுழைந்ததற்கு ஒரு ஆயுள் தண்டனையும் என 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றவாளி கருப்பசாமியுடன் இந்த கொலை வழக்கில் கைதான வெற்றிசெல்வன், செல்வன் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் இருவரும் விடுதலை செய்யபட்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...