முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாநகராட்சியின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) வலியுறுத்தியுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியின் முத்தண்ணன்குளம் பகுதியில் இளைஞர்களின் விளையாட்டு வளர்ச்சிக்காக ரூ.60 லட்சம் மதிப்பில் Turf மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டு,இளைஞர்களின் பயன்பாட்டிற்காக செயல்பட வேண்டிய மைதானம், தற்போது "KOVAI ADDA" என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு வணிக நோக்கில் இயக்கப்பட்டு வருவதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) குற்றம்சாட்டியுள்ளது.

இது குறித்து கண்டனம் அறிக்கை வெளியிட்டுள்ள, DYFI கோவை மாவட்டத் தலைவர் ஏ.என். ராஜா மற்றும் மாவட்டச் செயலாளர் எம். தினேஷ் ராஜா, இந்த Turf மைதானத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,200 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

இளைஞர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மைதானம், தற்போது தனியார் நிறுவனத்தின் லாபம் ஈட்டும் கருவியாக மாற்றப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டனம் தெரிவித்தனர்.



எனவே, கோவை மாநகராட்சி அந்த தனியார் நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து, Turf மைதானத்தை தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என DYFI கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், அனைத்து தரப்பு இளைஞர்களும் பயன்படுத்தும் வகையில் குறைந்த கட்டணத்தில் அல்லது குறிப்பிட்ட நேரங்களில் இலவசமாக பயன்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில், மக்கள் பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்தை தனியாரின் லாப நோக்கிலிருந்து மீட்டெடுக்க இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேரடி போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றுஅறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...