15 ஆண்டுகள் பழமையான மரம் சாலையில் விழுந்து விபத்து : 2 மணி நேரம் போரடி அகற்றிய தீயணைப்புத் துறையினர்

கோவை : ராமநாதபுரம் பகுதியில் நஞ்சுண்டாபுரம் சாலையில் விழுந்த சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அப்புறப்படுத்தினர்.

கோவை : ராமநாதபுரம் பகுதியில் நஞ்சுண்டாபுரம் சாலையில் விழுந்த சுமார் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை, தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அப்புறப்படுத்தினர். 



கோவை நஞ்சுண்டாபுரம் சாலை அருகே உள்ள முருகன் நகர் பகுதியில் உள்ளது கன்னிகா பரமேஷ்வரி நகர். இந்தப் பகுதியில் சுமார் 15 ஆண்டுகள் பழமையான வேப்பமரம் உள்ளது. இந்த பழமையான மரம், நேற்று மாலை திடீரென சாய்ந்தது. அந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நடமாடாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. மேலும், மரம் விழுந்ததில் அருகே உள்ள மின் கம்பங்களில் இருந்த மின் வயர்கள் அறுந்து விழுந்தன. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மரத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டது உடன் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர், மரம் அறுக்கும் கட்டிங் இயந்திரங்கள் மூலம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சாலையில் கடந்த மரத்தை அப்புறப்படுத்தினர்.

மேலும், இந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறை, காவல்துறை, மாநகராட்சி மற்றும் ஓசை அமைப்பினர் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...