குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 10 லிட்டர் பிராந்தி : குடிமகன்களை கவரும் திருப்பூர் சுயேட்சை வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி

திருப்பூர் : குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என திருப்பூரில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார்.

திருப்பூர் : குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம்தோறும் 10 லிட்டர் பிராந்தி வழங்கப்படும் என திருப்பூரில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் கவர்ச்சிகரமான தேர்தல் வாக்குறுதியை அறிவித்துள்ளார். 

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் தாவூத் என்பவர் பனியன் நிறுவனத்தில் தையலராக பணிபுரிந்து வருகிறார். இவர், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதற்கு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.



இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் ரூபாய் பணம் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத் தருவேன். அனைவரும் மருந்துக்காக சாப்பிடும் பிராந்தியை பாண்டிச்சேரியிலிருந்து சுத்தமாக இறக்குமதி செய்து, குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் மாதம் தலா 10 லிட்டர் கண்டிப்பாக வழங்கப்படும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு நிச்சயமாக அரசு வேலை வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு 10 சவரன் நகை மற்றும் தனது எம்.பி. நிதியில் இருந்து ரூ. 10 லட்சம் ரூபாய் வழங்கி இலவசமாக திருமணம் செய்து வைப்பேன். ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராமல் இறுதிவரை கக்கனைப் போல பாடுபடுவேன். மேட்டூரில் இருந்து திருப்பூருக்கு வாய்க்கால் வெட்டி குடிநீர் வழங்குவேன், எனக் கூறினார். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...