திருப்பூர் அருகே சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து : கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

திருப்பூர் : திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.


திருப்பூர் : திருப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் பிருத்திவிராஜ், கிருஷ்ணகுமார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 8 பேர் ஈரோட்டில் உள்ள தங்களது நண்பர் அரவிந்தின் சகோதரி திருமணத்திற்கு காரில் சென்றுள்ளனர். திருமணம் முடிந்து மாலை மீண்டும் கோவைக்கு திரும்பினர். அப்போது, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகுமார் அதிவேகமாக காரை இயக்கியுள்ளார். இதில், செங்கப்பள்ளி அருகே கார் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை மையத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், பிருத்திவிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கிருஷ்ணகுமார் பலத்த காயத்துடன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 



காரில் பயணித்த சந்தோஷ்குமார் என்பவர் பலத்த காயத்துடன் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற 5 பேரும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஊத்துக்குளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...