தரம் உயர்த்தப்பட்ட பள்ளிக்கு முறையான நிதி ஒதுக்காததால் கட்டுமானப் பணிகள் முடக்கம் : மேட்டுப்பாளையம் மாணவர்கள் வேதனை

கோவை : மேட்டுப்பாளையத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு, அதற்கான முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட அரசுப் பள்ளிக்கு, அதற்கான முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படாத காரணத்தால் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட மணி நகர் பகுதியில் உள்ள நகரவை அரசு நடுநிலைப்பள்ளி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து, பள்ளியின் கட்டுமான விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய வகுப்பறைகள் அமைப்பதற்கும், இப்பள்ளியில் ஏற்கனவே இயங்கி வந்த ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளியை தனியாக செயல்படவும் நடவடிக்கை எடுக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மேலும், பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்களைக் கட்டுவதற்கும், உடனடியாக திட்ட மதிப்பீடு செய்து அறிக்கை அனுப்பவும் அரசு சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. 

இதனையடுத்து, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த தேவையான திட்ட மதிப்பீடு மேட்டுப்பாளையம் நகராட்சியால் செய்யப்பட்டு, அவை முறைப்படி அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்கள் கடந்தும் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இதனால், இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் ஏமாற்றத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பள்ளிக்குள் உள்ள பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தாமதப்படுவதால், இக்கட்டிடம் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சுற்றிலும் புதர் கிடக்கும் இக்கட்டிடத்தில் காலி மது பாட்டில்களே அதிகம் காணப்படுவதாகவும், பள்ளிக்குள் அடர்ந்த புதர் காரணமாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாடுவதாகவும் வேதனை தெரிவிக்கும் மாணவ மாணவிகள், உடனடியாக அரசு அறிவித்தபடி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...