கோவை : பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கின் முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கோவை : பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கின் முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள அரசாணை வெளியிட்டிருந்த நிலையிலும், இன்னும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்படவில்லை. இந்த நிலையில், பொள்ளாச்சியை அடுத்த மாக்கினம்பட்டியில் உள்ள திருநாவுக்கரசு இல்லத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, திருநாவுக்கரசர் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, முக்கியக் குற்றவாளி திருநாவுக்கரசை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வர இருப்பதால், திருநாவுக்கரசு நீதுமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வாய்ப்புள்ளது.