பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் மற்றும் விபரங்கள் அரசாணையில் இடம் பெற்றுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, பணத்திற்காக மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில், தொடர்புடைய சபரிராஜன் (25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக இன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்கள் அரசாணையில் இடம் பெற்றுள்ளதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரங்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அ.தி.மு.க. அரசு. இனி யாரும் புகார் கொடுக்கக் கூடாது என மிரட்டுகிறதா..?. குற்றவாளிகளைக் காப்பாற்றத் தொடரும் ஆளும் தரப்பின் கபட நாடகம் இது, எனப் பதிவிட்டுள்ளார்.