தொலைதூர பயணத்தால் உயர்கல்வியை தொலைக்கும் பழங்குடியின மாணவர்கள் : ஆனைக்கட்டி அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த வேண்டுகோள்

கோவை : உயர் கல்விக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், கோவை ஆனைக்கட்டியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தும் சூழல் நிலவி வருகிறது.


கோவை : உயர் கல்விக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டி இருப்பதால், கோவை ஆனைக்கட்டியைச் சேர்ந்த பழங்குடியின மக்களின் பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தும் சூழல் நிலவி வருகிறது. 



கோவை - கேரளா எல்லையில் அமைந்துள்ள ஆனைக்கட்டியில் பழங்குடியின மாணவர்களுக்கான அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 59 மாணவர்கள் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இன்று பொதுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில், தேர்விற்காக, இந்த மாணவர்கள் 16 கிலோ மீட்டர் பயணம் செய்து, சின்னத்தடாகம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தேர்வு எழுதினர். இதற்கு காரணம், கடந்த 25 ஆண்டுகளாக ஆனைக்கட்டி அரசு உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படாதுதான். 

1966-ம் ஆண்டு குருகுலமாக இருந்த இந்தப் பள்ளி, 1995-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக மாற்றப்பட்டது. பின்னர், கடந்த 25 ஆண்டுகளாக எந்தவித உயர்கல்வி வசதிகளும் மேம்படுத்தவில்லை. இதன் விளையாக, மாணவர்கள் உயர்கல்வியை நீண்ட தூரம் பயணம் செய்து கல்வியை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் தங்களது கல்வியை நிறுத்தி விடுகின்றனர். ஒருசிலரே கட்டாயத்தின் பேரில், சின்னத்தடாகம் பள்ளியில் உயர்கல்வியை தொடர்ந்து வருகின்றனர். 



"இந்தப் பகுதியில் கொண்டுவரப்பட்ட முதல் பள்ளி இதுவாகும். சோலையூர், சிறுவாணி எஸ்டேட், வெள்ளைகுளம் வெச்சைபதி, வட்டலகி, கோட்டத்துறை மற்றும் அகளி உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கும் அனைத்து வசதிகளையும் கொண்ட பள்ளியாக இது திகழ்கிறது," என்கிறார் ஆனைக்கட்டி சமூக ஆர்வலர் ஏ. ஜோஸ்வா.

"நீண்ட தூரம் பயணிப்பது மாணவர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்தும். இதற்காக அவர்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடுகின்றனர். இதுவே, குறிப்பாக, மாணவிகள் உள்பட பள்ளிக் குழந்தைகள் கல்வியை இடைநிற்றலுக்கு காரணமாகிறது," என ஆனைகட்டியைச் சேர்ந்த டியூசன் ஆசிரியர் புனிதா ராஜன் கூறினார். 

இதனிடையே, இன்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பழங்குடியின மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வித்யா வானம் பள்ளியின் உதவியுடன் பள்ளிக் கல்வித்துறை சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. இதில், 28 மாணவிகள் மற்றும் 31 மாணவர்கள் உள்பட 59 பேர் தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 



"தேர்வு மையங்கள் அருகாமையிலேயே இருந்து இருந்திருந்தால், பயண நேரத்தை தேர்வுக்கு ஆயத்தமாவதற்காக பயன்படுத்துவோம். பெரும்பாலான மாணவர்கள் ஆனைக்கட்டி சுற்றுவட்டாரத்தில் இருப்பதால், தேர்வு எழுதுவதற்காக 32 கி.மீ. பயணம் செய்வது கடும் சவாலாக இருக்கிறது," என்றார் அட்டப்பாடி தாசனூர் குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவன் கே. சபரீஸ்வரன். 

"400 மாணவர்களின் கல்வி நலனுக்காக இந்தப் பள்ளியைத் தரம் உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஏனெனில், பெரும்பாலான மாணவர்கள் கல்வியைப் பாதியில் நிறுத்தி விடுவது கடினமாக உள்ளது," என முன்னாள் வார்டு உறுப்பினர் ஆர்.வி.சி. நடராஜன்.

அண்மையில், ஆனைக்கட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளியைத் தரம் உயர்த்த வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் பகுதி மக்கள் மனு அளித்திருந்தனர். 

பழங்குடியின மக்கள் நலத்துறையின் கீழ், முட்டத்துவயல், மவுதம்பதி உள்பட கோவை மாவட்டத்தில் 3 உயர்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மேட்டுப்பாளையம் மற்றும் வேல்ஸ்புரம் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...