Breaking: பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றியது குறித்த அரசாணையில் சர்ச்சை : எஸ்.பி.யைத் தொடர்ந்து தமிழக உள்துறைச் செயலருக்கும் சிக்கல்..!

கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட வழக்கு, இன்று சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான தமிழக உள்துறைச் செயலரின் அறிவிப்பு கடிதத்தில், பெண்ணின் விபரம் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.


கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் விபரம் இடம்பெற்றிருப்பதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

பொள்ளாச்சி கல்லூரி மாணவி பாலியல் வழக்கில் கைது செய்து சிறையில் வசந்தகுமார், திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது. 

மேலும், சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.jடி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டார். மேலும், சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி. நிஷா பார்த்திபன் தலைமையில் விசாரணை நடத்தவும் ஆணையிடப்பட்டது.

இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்ட ஓரிரு தினங்களிலேயே, வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் குறித்த தகவல்கள், பெயர்கள், அடையாளங்கள் எதுவும் வெளியிடப்படக் கூடாது என்ற சட்ட விதிமுறை மற்றும் நீதிமன்ற உத்தரவு இருந்தும், காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பதிவிட்டு பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்து வந்தது. அதேபோல, பெண்கள் ஆணையமும் இந்த செயல்பாட்டை கண்டித்துள்ளது.

மேலும், இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் விசாரிப்பதாகவும் ஆணையத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில், தற்போது தமிழக அரசின் உள்துறைச் செயலர் சி.பி.சி.ஐ.டி.யிலிருந்து வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதில், அந்த வழக்கின் விவரம் அடங்கியதுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரும் குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.









Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...