நீலகிரி : நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என விவசாயிகள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

பந்தலூர் அருகே கையுன்னி பகுதியைச் சேர்ந்தவர் ஏலியாஸ். இவர் தனது தேயிலை மற்றும் காபி தோட்டத்தில் தென்னை, பாக்கு, வாழை உள்ளிட்ட விவசாயப் பயிர்களை பயிரிட்டுள்ளார். கோரஞ்சால் அருகே டாஸ்மாக் கடை எதிரே உள்ள வனத்தில் முகாமிட்டிருந்த யானைகள், விலக்கலாடி - கையுன்னி சாலை வழியாக, ஏலியாஸ் தோட்டத்திற்குள் புகுந்துள்ளது. அங்கு தென்னை, வாழை, மற்றும் பாக்கு மரங்களை சாய்த்து நாசப்படுத்தியுள்ளது. எனவே, காட்டு யானைகளால் ஏற்பட்டுள்ள சேதத்திற்கு, உரிய இழப்பீடு பெற்றுத் தருமாறு விவசாயிகள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், விலக்கலாடி பகுதியில் நாள்தோறும் காட்டு யானைகள் முகாமிட்டிருப்பதுடன், சாலை வழியாக நடந்து செல்வதும், விவசாய பயிர்களை நாசப்படுத்தி வருவதும் இப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.