நீண்ட இழுபறிக்குப் பிறகு அ.தி.மு.க. - தே.மு.தி.க., கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து : தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு என தகவல்

கோவை : நீண்ட இழுபறிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. - தே.மு.தி.க., கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.


கோவை : நீண்ட இழுபறிக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க. - தே.மு.தி.க., கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களுக்கு வரும் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் போது, தமிழகத்தின் 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், இந்த நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், மார்ச் 19-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 26-ம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள். மார்ச் 27-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை. மார்ச் 29-ம் தேதி மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். 

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி விவகாரங்களில் தமிழக அரசியல் கட்சிகள் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., இடம் பெற்றுள்ளன. தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வருவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், தொகுதி பங்கீட்டால் இழுபறி நீடித்து வந்தது. தமிழக அரசியல் களம் இப்போது தே.மு.தி.க.,வை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருந்தது. தே.மு.தி.க.,வின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வந்தன. மேலும், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேசப்பட்டு வந்த வேளையில், தி.மு.க.வினரையும் தே.மு.தி.க.வினர் சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஆனால், இதற்கு தே.மு.தி.க.வினர் மறுப்பு தெரிவித்தனர். அதோடு, இன்னும் இரு தினங்களில் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட சூழலில், கூட்டணியை இறுதி செய்வதற்காக அ.தி.மு.க., தே.மு.தி.க.வினர் சென்னை கிரவுன்பிளாசா ஓட்டலுக்கு வருகை புரிந்தனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட இரு கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு நிர்வாகிகள் கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், தே.மு.தி.க.விற்கு 4 இடங்கள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இரு கட்சியின் தலைவர்களும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 

நீண்ட இழுபறிக்கு பிறகு தே.மு.தி.க.வுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டதால், அ.தி.மு.க., பா.ஜ.க., மற்றும் பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நிம்மதி கலந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...