நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் பகுதியில் ரூ. 50 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டத்தை தென்னிந்திய கண்டோன்மென்ட்களின் முதன்மை இயக்குநர் எல்.கே.பெகு தொடக்கி வைத்தார்.

குன்னூர் அருகே மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கண்டோன்மென்ட் போர்டு செயல்பட்டு வருகிறது. இதில், 7 வார்டுகள் உள்ளன. வெலிங்டன் கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தில் தூய்மை இந்தியா திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் உள்ள 62 கண்டோன்மென்ட்களில் சிறந்த கண்டோன்மெண்ட்டாக குன்னூர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தின் கீழ் உள்ள 7 வார்டுகளில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாதாள சாக்கடை திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா கண்டோன்மென்ட் மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு தென்னிந்திய கண்டோன்மென்ட்களின் முதன்மை இயக்குநர் எல்.கே.பெகு தலைமை வகித்து அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் வெலிங்டன் கண்டோன்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஹரிஷ்வர்மா, நீலகிரி மாநிலங்களவை உறுப்பினர் கே. ஆர். அர்ஜுணன், குன்னூர் சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு, கண்டோன்மென்ட் துணைத் தலைவர் எம்.பாரதியார், பிரிகேடியர் பங்கஜ் பி. ராவ், கர்னல் பி. பி. பெர்க்கர், பொறியாளர் சுரேஷ், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன், கண்டோன்மென்ட் நியமனம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.