கோவை : கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார்.
கோவை : கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம், 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் இந்த முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து சொட்டு மருந்து கொடுத்து செல்கின்றனர்.

மேலும் காலை 8;40 மணியளவில் மட்டும் 340 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 3.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்கப்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் ஆயிரத்து 202 மையங்களும் நகர்ப்புறங்களில் 379 என மொத்தம் 1581 சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 24 மையங்கள் மற்றும் 20 நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல பொது சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள் என சுமார் 6 ஆயிரத்து 324 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர் வேல், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.