கோவையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ் பி வேலுமணி

கோவை : கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார்.


கோவை : கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம், 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன்படி கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனையில் இந்த முகாமினை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவங்கி வைத்தார். இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆர்வத்துடன் வந்து சொட்டு மருந்து கொடுத்து செல்கின்றனர். 



மேலும் காலை 8;40 மணியளவில் மட்டும் 340 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. கோவை மாவட்டத்தில் 3.33 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இன்று கொடுக்கப்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் ஆயிரத்து 202 மையங்களும் நகர்ப்புறங்களில் 379 என மொத்தம் 1581 சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு வரும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 24 மையங்கள் மற்றும் 20 நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல பொது சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ரோட்டரி சங்கங்கள் என சுமார் 6 ஆயிரத்து 324 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று கோவை அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்ட இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன், இருப்பிட மருத்துவ அலுவலர் சௌந்தர் வேல், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார், அம்மன் அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...