திருப்பூர் : நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கே. ராதாகிருஷ்ணனின் கட்சி பொறுப்பைப் பறித்து பொள்ளாச்சி வி. ஜெயராமனிடம் கொடுத்ததற்கு, அ.தி.மு.க.வினர், பல்வேறு காரணங்களைக் கூறி வருகின்றனர்.

உடுமலை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து தமிழக கால்நடைத்துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புறநகர் மாவட்ட செயலாளராக பொள்ளாச்சி வி.ஜெயராமன் கடந்த 3 நாட்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். கே.ராதாகிருஷ்ணனுக்கு அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர், சென்னையில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
இது தொடர்பாக உடுமலைப்பேட்டையை சேர்ந்த அ.தி.மு.க.,வினர் சிலர் கூறியதாவது: வி.ஜெயராமன் பல தேர்தல்களை பார்த்தவர். பல இடைத்தேர்தல்களில் வேலை செய்தவர். மாநில தேர்தல் பிரிவு செயலாளராக, சிறப்பாக பணி செய்தவர். ஆனால், அவரது அனுபவம் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு கைகொடுக்கும் என அ.தி.மு.க., தலைமை நினைத்துள்ளது. அதன்படி, ஜெயராமனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், அணுகுமுறை என்பது வேறு வேறாகத்தான் உள்ளது.
பொள்ளாச்சி எம்.பி.,யான மகேந்திரனை கூட அனுசரித்து செல்லாமல் இருப்பது, கட்சி மாறி வந்தவர்களுக்கு பதவி வழங்கியது, கட்சியின் சீனியர்களை அரவணைத்து செல்லாமல் இருப்பது என பதவி பறிப்புக்கான காரணங்கள் ஏராளம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு சென்று, மீண்டும் திரும்பி வந்த ஹக்கீமுக்கு, அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட செயலாளர் பதவியை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பலத்த சிபாரிசு செய்ததால் கிடைத்தது. இப்படி பல்வேறு விஷயங்களை அடுக்கிக்கொண்டே சொல்லலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி எம்.பி. தொகுதிக்கு தற்போதைய எம்.பி. மகேந்திரனே போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி ஆகி உள்ள நிலையில், அமைச்சர் ராதாகிருஷ்ணன் அவரது வெற்றிக்கு எந்தளவுக்கு இறங்கி வேலை செய்வார் என்பதும் சந்தேகமாகவே இருந்தது. ஆனால், தற்போது புறநகர் மாவட்ட செயலாளர் பதவி மாற்றம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம், என்கின்றனர்.
இந்த நிலையில், புறநகர் புதிய மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், திருப்பூர் மாவட்ட புறநகர் பகுதியில் ஒன்றியச் செயலாளர்களை உற்சாகமாக சந்தித்து வருகிறார். 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்த ராதாகிருஷ்ணனை நீக்கிவிட்டு, அப்போதும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு இதே புறநகர் மாவட்ட செயலாளர் பதவியை அன்றைக்கு வழங்கியவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் தரப்பினர் கூறியதாவது :- பொள்ளாச்சி ஜெயராமன், கோவையில் உள்ளார். திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் உள்ள சென்னிமலை 200 கி.மீ தொலைவில் உள்ளது. இன்றைக்கு அனைவரும் வந்து சென்னை தலைமை கழகத்தில் மனு அளித்தனர். அனைவரும் கட்சியில் தான் உள்ளோம். கட்சியில் சீனியர், ஜூனியர் என்று யாரையும் பார்ப்பதில்லை. இருவரும் சமூகம் ஒன்றாக இருந்தாலும், அரசியல் என்பது வேறு தானே,” என்றனர்.