கோவை : பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து பணம், நகையை கேட்டு மிரட்டும் கும்பலை சேர்ந்த 3 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தில் சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. அதேபோல, இணையதளங்களின் மூலம் நடைபெறும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. இதில், சமூகவிரோதிகள் பணம் பறிக்கும் செயலில் இளம் பெண்களை குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொள்ளாச்சி பகுதியில் சமூக விரோத கும்பல் ஒன்று, இளம்பெண்களை, கல்லூரி மாணவிகளை குறிவைத்து முகநூலில் நட்பாக பழகி, பிறகு காதல் வசப்படுத்தி, ஆபாச படம் எடுத்து வெளியிடுவதாக மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், பொள்ளாச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தொடர்பாக போலீஸார் 3 பேரை கைது செய்தனர். ஆனால், இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு இன்று காலை பொள்ளாச்சியில் மாக்கினாம்பட்டியிலுள்ள தனது வீட்டுக்கு செல்லும் வழியில் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.