கோவை : ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காட்டு யானைகளினால் பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா அறக்கட்டளையின் சார்பில் இன்று மாலை 6 மணி முதல் மகாசிவராத்திரி கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், சிறப்பு விருந்தினராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டவர் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தில் நடைபெற்று வரும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்றுள்ள பொதுமக்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, காட்டு யானைகளினால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், வனத்துறை பொறுப்பாகாது என கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி டி. வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கடந்த மாதம் 18-ம் தேதி ஈஷா யோகா அறக்கட்டளைக்கு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளார். மேலும், அதிக வெளிச்சமுடைய விளக்குகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிக ஒலி எழுப்பக் கூடிய வகையிலான ஒலிப் பெருக்கிகளை வனப்பகுதிகளுக்கு அருகே வைக்கக் கூடாது. அதோடு, வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்பது போன்ற செயல்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"ஈஷா யோகா மையம் சார்பில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, யானைகளின் நடமாட்டம் உள்ளதா என கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கண்காணிப்பு கோபுரங்களிலும் குறைந்தபட்சம் 4 நபர்கள் இருப்பார்கள். அதோடு, தற்காலிக சோலார் மின்வேலிகள் வனப்பகுதிகளின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், தண்ணீர் மற்றும் உணவை தேடி வனப்பகுதியில் வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்," என்றார் வனத்துறை அதிகாரி டி. வெங்கடேஷ்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பொதுமக்கள் வனப்பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும் என்றும், குறிப்பாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.