கோவை : மகாசிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிங்கிரி மலையை வனத்துறையினருடன் ஏராளமான தன்னார்வலர்கள் இணைந்து இரவு, பகலாக தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தென்கயிலாயம் எனப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலில் மகாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று இரவு மகாசிவராத்திரி என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க வெள்ளிங்கிரி மலைக்கு குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, வனத்துறையினருடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வெள்ளிங்கிரி மலையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மலைப்பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல்வேறு கழிவுப் பொருட்களை அவர்கள் அப்புறப்படுத்தினர். மேலும், வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்க வரும் பக்தர்களிடமும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் இருக்கின்றதா..? என தன்னார்வலர்கள் சோதனை செய்து அனுப்புகின்றனர். அப்போது, தடையை மீறி மதுபாட்டில்கள் மற்றும் புகையிலை போன்றவை சில பக்தர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
"வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களிடம் சோதனை நடத்தப்படுகிறது. அவர்களில் சிலரிடம் மதுபாட்டில்கள் மற்றும் புகையிலை இருப்பது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. விலங்குகள் வசிக்கும் இடம்தான் வனப்பகுதி என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, வனத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவ வேண்டும்," என்றார் தன்னார்வலர்.
இந்த தன்னார்வலர்கள் தொடர்ந்து மூன்று நாட்களாக, அதாவது 5-ம் தேதி வரை வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் தங்கி தூய்மைப் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், தீ விபத்து ஏற்பட்டால், அதனை தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பம்ப் மோட்டார்கள் நிறுவப்பட்டுள்ளன.