ஈஷா நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்பதற்கு எதிர்ப்பு : 'முரசொலி' நாளிதழில் விமர்சித்து கடும் தாக்கு

கோவை : 'மதம் சார்ந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு நாட்டின் உயர்பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் செல்வது அறமற்ற செயல்!' என தி.மு.க., வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

கோவை : 'மதம் சார்ந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு நாட்டின் உயர்பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் செல்வது அறமற்ற செயல்!' என தி.மு.க., வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கடுமையாக விமர்சித்துள்ளது.

ஈஷா யோகா மையம் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியிலிருந்து நேற்று கோவை வந்துள்ளார். ஈஷா மையத்தில் இன்று இரவு நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்கிறார்.

இதனைக் கடுமையாக விமர்சித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முரசொலி நாளிதழில் தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 'சிவராத்திரி நிகழ்ச்சிக்கு இவர் சாதாரண மனிதராகச் சென்றால் நமக்கு எந்த சிக்கலும் இல்லை. தனிப்பட்ட ஒரு சந்நியாசி - பணக்கார சந்நியாசி - புதிர்கள் பல விடுபடாத சந்நியாசி நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சிக்கு, அவர் நடத்தும் வழிபாட்டிற்கு மதச் சார்பற்ற நாட்டின் குடியரசுத் தலைவர் செல்வதும், அங்கே வழிபடுவதும் சரியானதுதானா..?, அது ஏற்புடையதுதானா..?. பிரதமர் போயிருக்கக் கூடும். அதையும் சரியானது என்று ஏற்றுக் கொள்வதற்கு இல்லை. இதற்கு ஆகும் செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்,' எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், 'மத்திய பா.ஜ.க. அரசிடம் செல்வாக்குப் பெற்ற சந்நியாசியாக 'ஜக்கி' இருந்தாலும் பிரதமரைவிட குடியரசுத் தலைவர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளப் பெரிதும் யோசித்து இருக்க வேண்டியவர்', 'ஆதியோகி என்று சொல்லிக் கொண்டு பகட்டு சந்நியாசியின் கட்டடப் பர்ணச் சாலையில் ஆனந்த தாண்டவம் (?) நிகழ்கிறது. அதைப் பார்க்க குடியரசுத் தலைவர் டெல்லியிலிருந்து வந்து செல்கிறார். இனி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமது பதவிக் காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பது பதவிக்குரிய கண்ணியத்தைக் காக்க உதவும் என்பதே நமது எண்ணம்.' என ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மற்றும் நிகழ்ச்சியில் பங்குபெறும் குடியரசுத் தலைவரை விமர்சித்துள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...