கோவை : வால்பறையில் சுற்றுலா மேம்பாடு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், தாவரவியல் பூங்கா மற்றும் படகுத்துறை அமைக்கப்பதற்கான அடிக்கல்லை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாட்டினார்.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நகராட்சிப் பகுதியில் ரூ. 5 கோடி மதிப்பில் தாவரவியல் பூங்கா மற்றும் ரூ. 2 கோடி மதிப்பில் படகுதுறை அமைக்கவும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு 112 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- கோவை மாவட்டத்தின் கடைகோடி பகுதியில் வால்பாறையில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வில் வளம்பெறும் வகையில் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளுக்கும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு பொறுப்பேற்றதிலிருந்து முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டுமுறைக்கு மேல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்கியது அம்மா அவர்களின் அரசு, மேலும், கடந்த ஓரு ஆண்டுகளாக தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வினைப் பொருத்தவரையில் அனைத்து இடற்பாடுகளையும் தகர்த்து முதலமைச்சர் அவர்களே, நேரடியாக தலையிட்டு நமது கோரிக்கையை ஏற்று இன்றையதினம் ரூ. 5 ஊதிய உயர்வாக பெற்றுத் தந்துள்ளார். இவ்வாறு தமிழக அரசு நகரங்களில் மட்டுமல்ல, கடைகோடி மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றும் அரசாக விளங்கி வருகின்றது.
வால்பாறைக்கு சுற்றுலாவிற்கு வரும் மக்களைக் கருத்தில் கொண்டும், இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பளிக்கக்கூடிய வகையில் தவாரவியல் பூங்கா, படகுதுறை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளது.
இதன்மூலம், வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக வேலைவாய்ப்பளிக்கவும், நீடித்த பொருதார முன்னேற்றம் பெறும் சூழலும் உருவாகும், இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், பொள்ளாச்சி கோட்டாட்சியர் ரவிக்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.