கோவை : குனியமுத்தூர் பகுதியில் உள்ள நிர்மல் மாதா என்ற பள்ளியில் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயண்ணன் விசாரணை நடத்தினார்.
கோவை : குனியமுத்தூர் பகுதியில் உள்ள நிர்மல் மாதா என்ற பள்ளியில் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயண்ணன் விசாரணை நடத்தினார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் நிர்மல் மாதா மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்றைய தினம் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்வதற்கான விண்ணங்கள் வழங்கப்படுவதாகவும், கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்களில் இந்தப் பள்ளிக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்துவார் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பள்ளி முதல்வரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐய்யண்ணன் விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சி.இ.ஓ., ஐய்யண்ணன் கூறியதாவது.

பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு நாள் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் விண்ணப்பம் வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டியதாக பள்ளியில் இருந்து விளக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த செயலுக்கு வருத்தம் தெரிவுத்து பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளது. இன்று நடைபெற்ற விசாரணை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.
கடந்த 3 ஆண்டுகள் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில், மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு எதுவும் நடைபெற வில்லை, எனக் கூறினார்.