குனியமுத்தூர் அருகே தனியார் பள்ளியில் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே இடம் : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை

கோவை : குனியமுத்தூர் பகுதியில் உள்ள நிர்மல் மாதா என்ற பள்ளியில் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயண்ணன் விசாரணை நடத்தினார்.


கோவை : குனியமுத்தூர் பகுதியில் உள்ள நிர்மல் மாதா என்ற பள்ளியில் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐயண்ணன் விசாரணை நடத்தினார்.



கோவை குனியமுத்தூர் பகுதியில் நிர்மல் மாதா மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்றைய தினம் எல்.கே.ஜி., வகுப்பில் சேர்வதற்கான விண்ணங்கள் வழங்கப்படுவதாகவும், கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே விண்ணப்பம் வழங்கப்படும் என போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்களில் இந்தப் பள்ளிக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 



மேலும், இந்த விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்துவார் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். 

இந்த நிலையில், பள்ளி முதல்வரிடம் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஐய்யண்ணன் விசாரணை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சி.இ.ஓ., ஐய்யண்ணன் கூறியதாவது.



பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு நாள் கிறிஸ்துவர்களுக்கு மட்டும் விண்ணப்பம் வழங்கப்படும் என நோட்டீஸ் ஒட்டியதாக பள்ளியில் இருந்து விளக்கம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த செயலுக்கு வருத்தம் தெரிவுத்து பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளது. இன்று நடைபெற்ற விசாரணை குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.

கடந்த 3 ஆண்டுகள் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இதில், மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு எதுவும் நடைபெற வில்லை, எனக் கூறினார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...