நீலகிரி : கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குற்றவாளிகள் சயான், மனோஜ் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை செசன்ஸ் நீதிமன்றத்தில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு நடைபெற்று வருகிறது . கடந்த பிப்ரவரி 8-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, முக்கிய குற்றவாளிகளான சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி வடமலை இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தார். உடனே குற்றவாளிகள் தலைமறைவாகினர். இதற்கிடையே சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் வக்கீல் இருவரையும் கைது செய்ய தடைக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி, அவர்கள் இருவரையும் 4 தினங்களுக்கு கைது செய்ய தடை விதித்தார். பின்னர், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தீர்ப்பை ஒத்தி வைப்பதாக நீதிபதி வடமலை கூறினார்.

இந்த நிலையில், கோத்தகிரி போலீசார் நேற்று சயான் மற்றும் மனோஜ் ஆகியோரை திருச்சூரில் கைது செய்து, இரவு 10 மணிக்கு உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சயான் தரப்பு வழக்கறிஞர் செந்தில், உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின் போது, இறுதி தீர்ப்பு வரும் வரை இவர்களை கைது செய்ய மாட்டோம் என்று அரசு வழக்கறிஞர் உறுதி அளித்துள்ள நிலையில், தற்போது குற்றவாளிகளை கைது செய்தது தவறு என்று வாதிட்டார். இதற்கு அரசு வழக்கறிஞர் பால நந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி வடமலை, நேற்று ஒருநாள் இரவு மட்டும் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், மீண்டும் இன்று காலை அவர்களை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.