ஊடக செய்தி எதிரொலி : விதிமுறைகளுக்குட்பட்டு கோவை அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் சரியாக நிறுத்தப்படும் பேருந்துகள்

கோவை : நோயாளிகளுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், கோவை அரசு மருத்துவமனை முன்பு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக கடந்த மாதம் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது, பேருந்துகள் உரிய பகுதியில் நிறுத்தப்பட்டு வருவது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : நோயாளிகளுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், கோவை அரசு மருத்துவமனை முன்பு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக கடந்த மாதம் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது, பேருந்துகள் உரிய பகுதியில் நிறுத்தப்பட்டு வருவது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை அரசு மருத்துவமனை முன்பு தனியார் பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல், மருத்துவமனை நுழைவு வாயிலில் நிறுத்தி நோயாளிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வந்தனர். இது குறித்து சிம்பிளிசிட்டி செய்தி தொகுப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியிடப்பட்டது. உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு தனியார் பேருந்துகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதால், கோவை அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. 



அதேபோல, தனியார் பேருந்துகள் கோவை அரசு மருத்துவமனையின் புதுகேட் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகளை நிறுத்தாமல் மருத்துவமனையின் நுழைவு வாயிலை அடைத்தபடி பேருந்துகளை நிறுத்துவதையும், இதனால், மருத்துவமனை முன்பு நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதையும் இந்த செய்தி தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதனால், 108 ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாயிலில் புகுந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு நோயாளியைக் கொண்டு செல்வதற்கு சுமார் 15 நிமிடத்திற்கு மேல் வீணாக காலதாமதம் ஆகிறது. இதைப் பார்க்கும் மருத்துவமனையின் பாதுகாவலர்கள் ஆம்புலன்சிற்கு வழிவிட, விசில் ஊதி பேருந்தை அப்புறப்படுத்தக் கூறினாலும், பேருந்தை அப்புறப்படுத்துவது கிடையாது. மாறாக, மருத்துவமனை பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வீடியோ காட்சிகளை நாம் நேரடியாக பதிவு செய்து சிம்ப்ளிசிட்டியில் செய்தி தொகுப்பாக வெளியிட்டிருந்தது.



இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மருத்துவமனையின் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கின்றன. தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் ஆம்புலன்ஸ்கள் செல்ல இடம் விட்டும் நிறுத்துகின்றனர். அதேபோல, காவல் றை சார்பில் பேருந்துகள் மருத்துவமனை வாயிலில் நிற்காதபடிக்கு தற்காலிக தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.



இந்த செயல்முறை சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியதுடன், தொடர்ச்சியாக இதேபோல இயங்க வேண்டும் எனவும், உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட்டு பேருந்துகள் வாகனத்தை இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்த குறுகிய சாலையில் அதிக வாகனங்கள் கடப்பதால் ஏற்படும் நெரிசல்களை கட்டுப்படுத்த விரைவில் பேருந்து நிறுத்தத்தை மாற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...