கோவை : நோயாளிகளுக்கும், ஆம்புலன்ஸ்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில், கோவை அரசு மருத்துவமனை முன்பு பேருந்துகள் நிறுத்தப்படுவதாக கடந்த மாதம் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது, பேருந்துகள் உரிய பகுதியில் நிறுத்தப்பட்டு வருவது, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை முன்பு தனியார் பேருந்துகள், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகளை நிறுத்தாமல், மருத்துவமனை நுழைவு வாயிலில் நிறுத்தி நோயாளிகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வந்தனர். இது குறித்து சிம்பிளிசிட்டி செய்தி தொகுப்பில் கடந்த மாதம் 14-ம் தேதி வெளியிடப்பட்டது. உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு தனியார் பேருந்துகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருவதால், கோவை அரசு மருத்துவமனையின் முன்பு உள்ள பேருந்து நிலையத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

அதேபோல, தனியார் பேருந்துகள் கோவை அரசு மருத்துவமனையின் புதுகேட் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில், பேருந்துகளை நிறுத்தாமல் மருத்துவமனையின் நுழைவு வாயிலை அடைத்தபடி பேருந்துகளை நிறுத்துவதையும், இதனால், மருத்துவமனை முன்பு நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுவதையும் இந்த செய்தி தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், 108 ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வாயிலில் புகுந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு நோயாளியைக் கொண்டு செல்வதற்கு சுமார் 15 நிமிடத்திற்கு மேல் வீணாக காலதாமதம் ஆகிறது. இதைப் பார்க்கும் மருத்துவமனையின் பாதுகாவலர்கள் ஆம்புலன்சிற்கு வழிவிட, விசில் ஊதி பேருந்தை அப்புறப்படுத்தக் கூறினாலும், பேருந்தை அப்புறப்படுத்துவது கிடையாது. மாறாக, மருத்துவமனை பாதுகாவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இந்த வீடியோ காட்சிகளை நாம் நேரடியாக பதிவு செய்து சிம்ப்ளிசிட்டியில் செய்தி தொகுப்பாக வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மருத்துவமனையின் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிற்கின்றன. தனியார் பேருந்துகளும், அரசு பேருந்துகளும் ஆம்புலன்ஸ்கள் செல்ல இடம் விட்டும் நிறுத்துகின்றனர். அதேபோல, காவல் றை சார்பில் பேருந்துகள் மருத்துவமனை வாயிலில் நிற்காதபடிக்கு தற்காலிக தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயல்முறை சமூக ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியதுடன், தொடர்ச்சியாக இதேபோல இயங்க வேண்டும் எனவும், உயிர்காக்கும் ஆம்புலன்ஸ்களுக்கு வழிவிட்டு பேருந்துகள் வாகனத்தை இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல, இந்த குறுகிய சாலையில் அதிக வாகனங்கள் கடப்பதால் ஏற்படும் நெரிசல்களை கட்டுப்படுத்த விரைவில் பேருந்து நிறுத்தத்தை மாற்ற வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.